Saturday, March 28, 2020

🔥SMART VISION ONLINE TRAINING

🔥SMART VISION ONLINE TRAINING🔥
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில் இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர், யுவதிகள் அனைவருக்கும் உரிய வேலை வாய்ப்பு 
உங்கள் கையில் இருக்கும் smartphone போதும் மாதம் 30,000.etc உழைக்க முடியும் 
இணைந்து கொள்ளும் நாளில் நீங்கள் உழைப்பது உறுதி. 
நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்கின்ற அந்த நாளிலிருந்தே ஆன்லைன் ஊடாக உழைக்கவில்லை என்றால் அடுத்த நாள் உங்களுடைய பணத்தை திருப்பித் தருவோம்.

அனைத்து 20 பாடங்களுக்கும் நீங்கள் வீட்டில் இருந்தவாறே Online வழியாக கற்பிக்கப்படுகின்றன.

( Click Bank , EBay , Google AdSense , Google Admob , Forex Free , IQ Option Free , Transcription , Freelancer Sites , Voices , Review Writing , T-Shirt designing , Logo Making , JV Zoo , Per Day 10$ & etc..

மொத்த வகுப்பு கட்டணம் - 10,000/- 

Offer price                             _6000/_

மாதம் 30000RS மேல் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க முடியும்.

CALL US AND EARN MONEY
0750607144
🎯Smart Vision  (PVT) LTD இன் மிகப் பெரும் சலுகை உங்களுக்காக காத்திருக்கின்றது…

பெரும்பாலும் மக்கள் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்து ஓய்வு எடுக்க நேரமின்றி சம்பாதிக்கின்றனர் ஆனால் சிலர் மட்டும்தான் இணையத்தின் (INTERNET) மூலமாக எளிமையாக சம்பாதிக்கின்றனர் அவ்வாறு  நீங்கள் உங்களது வீடுகளில் இருந்தபடியே பகுதி நேரமாக வேலை செய்து மாதத்திற்கு 30,000/- to 50,000/- த்திற்கும் மேல் சம்பாதிப்பதற்கான மிகவும் சுலபமான வழிகளினை  நாங்கள் உங்களுக்கு கற்றுத் தருகிறோம்.

அதுமட்டுமின்றி பெண்களுக்கான வகுப்புகள் அனைத்தும் பெண் பயிற்றுவிப்பாளரால் வழங்கப்படும்.

*இப்போது உங்களுக்கு நிறைய கேள்விகள் எழும்,
01. இதன் மூலம் எவ்வாறு சம்பாதிப்பது?
02. உண்மையில் இதில் சம்பாதிக்கலாமா?
03. எவ்வாறு இதனை கற்றுக் கொள்வது?
04. எவ்வாறு நாங்கள் Smart Vision PVT Ltd  உடன்  இணைவது ?


நீங்கள் எங்களுடன் இணைந்து கொண்டு ஒன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க  ஆர்வமாக   உள்ளீர்களா   இப்போதே Application  என்று SMS செய்யவும்.

உங்களுக்கு  28 பாடங்களையும் குறைந்த கட்டணத்தில் தந்து உங்களையும் ஒன்லைன் ஊடாக வருமானம் ஈட்டும்  நபராக மாற்றுவதற்கு ஆர்வமாக உள்ளோம்.        
                                                                                                                                                                                                  
👉உங்கள் Real Forex கணக்கிற்கு 100$ இலவசம்
(Real Trade செய்ய முடியும்)

👉எங்கள் வழிகாட்டலுட்டன் ஒரு நாளைக்கு 10$ (Rs- 1870/-) சம்பாதிக்கலாம்.

👉28 வளிகளினுடாக online இல்உழைக்க முடியும் அந்த  அனைத்து 28 பாடங்களுக்கும் நீங்கள் வீட்டில் இருந்தவாறே Online வழியாக கற்பிக்கப்படுகின்றன.( Click  Bank , EBay ,  Google AdSense ,  Google Admob ,  Forex  Free ,  IQ Option Free ,  Transcription ,   Freelancer Sites ,  Voices ,  Review Writing ,  T-Shirt designing ,  Logo Making , watching video earing,ads click,JV Zoo , Per Day 10$ ,  Photo uploading , Aritical writing & etc..

✍️ மொத்த வகுப்பு கட்டணம் - Rs.6000/-✍️
(இச்சலுகை இம்மாத மட்டுமே இருக்கும் அதன்பின்  வகுப்புக் கட்டணம் கூடவுள்ளது.) 

 *நீங்கள் எங்களுடன் இணைந்து கொண்டு ஒன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க  ஆர்வமாக   உள்ளீர்களா   இப்போதே Application  என்று SMS செய்யவும்.*
*(Clossing Date 31.03.2020)*

Friday, March 27, 2020

ஊரடங்கு சட்டம் கடுமையாக்கபட்டுள்ளது

#இலங்கையில் பூராவும்  நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்
கடுமையாக்கப்பட்டுள்ளது

இந்தியப் பிரதமர் நாட்டு மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி சீன நாட்டின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

கனடா நாட்டு பிரதமரின் மனைவி படுக்கையில் இருந்தவாறே கண்ணீரோடு பேட்டி கொடுக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் கொரோனா என்ற கொடிய தொற்று நோயால்  பாதிக்கப்பட்டு
தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.

இத்தாலி பிரதமர் இறந்தவர்களை அடக்கம் பண்ண எங்களிடத்தில் இடமில்லை ஆட்களுமில்லை என்று பொது இடத்தில்  கதறுகிறார்.

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது????

அண்ட சராசரங்களையும் ஆளுவோம் என்று மார்தட்டிய வல்லரசு நாடுகள் இன்று கண்ணுக்கு புலப்படாத வைரஸை கண்டு அஞ்சி நிற்கின்றன.

சூரியனையும் சந்திரனையும் செவ்வாயையும் புதனையும் அணு அணுவாய் ஆராய்ச்சி செய்த மனித குலம் செய்வதறியாது கலங்கி நிற்கிறது.

செவ்வாய் கிரகத்தில் குடியேறப்போகிறோம் என்ற மனித இனம் பூமியில் வாழ வழியின்றி திகைத்து நிற்கின்றது.

நாட்டையும் நாட்டின் தலைவர்களையும்  பாதுகாக்க குண்டு துளைக்காத வாகனங்களை உற்பத்தி செய்த மனித ஆற்றல் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கொத்து கொத்தாய் செத்து மடிகிறது.

உலகம் இவ்வளவு தான்.

இங்கே எவனும் உயர்ந்தவனும் இல்லை. தாழ்ந்தவனும் இல்லை.
      *தன் மதம் தான் உயர்ந்தது , தன் சாதிதான் உயர்ந்தது என்று கூறும் அறிவாளிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்*

:'கொரோனா' பாதிப்பை, 20 நொடிகளில் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்

கோவை:'கொரோனா' பாதிப்பை, 20 நொடிகளில் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை
, கோவையை சேர்ந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

'கொரோனா' பாதிப்பை உறுதிப்படுத்த, ஒருவரின் சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. இதற்கு ஏறக்குறைய, இரு நாட்கள் வரை பிடிக்கிறது. இதன் மூலம், நோய் பாதிப்பு அதிகரிப்பதோடு, ஆரம்ப கட்ட சிகிச்சையில் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள 'ஏ.இ.எஸ்., டெக்னாலஜிஸ்' நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. இதன் மூலம், 20 நொடிகளில் 'கொரோனா' பாதிப்பை கண்டறிய முடியும் என்கிறார், நிறுவன முதன்மை செயல் அலுவலர் ரமேஷ்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை, இணைய தள சேவைகளுக்கு தேவையான மென்பொருட்கள் உட்பட, 11 மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 'ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.,)' எனும் தொழில்நுட்பத்தை, நகை தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளோம். இதையடுத்து, 'கொரோனா' பாதிப்புக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. 


சீனாவில், 'அலிபாபா டாட் காம்' நிறுவனம், இந்த தொழில் நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி உள்ளது. அவர்களிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் இந்நடைமுறையை பயன்படுத்தினர்.அதில், 96 சதவீதம் துல்லிய முடிவுகளை அளித்துள்ளனர். தற்போது நம்மிடம் உள்ள குறைந்தளவு தகவல்களின் மூலம், 70-80 சதவீதம், துல்லிய முடிவுகளை தரமுடியும். அறிகுறிகள் உள்ள ஒருவரின் எக்ஸ்ரே, 'சிடி' ஸ்கேன் பரிசோதனை மூலம், 20 நொடிகளில், கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியும். 


இதன்படி, உடல் வெப்பத்தை 'தெர்மல் டிடெக்டர்கள்' மூலம் கணக்கிட்டு, தேவைப படு வோருக்கு, எக்ஸ்ரே, 'சிடி' ஸ்கேன் எடுத்து, அதன் மூலம் பரிசோதனை செய்தால் பாதிப்பு குறித்து தெரியும். அரசு நமக்கு உதவி செய்தால், நாமும், 96 சதவீத துல்லியத்தை வழங்க முடியும். பாதிப்பு உள்ள ஒருவருக்கு, துவக்க நிலையிலேயே உறுதி செய்ய முடியும். இதன் மூலம் சிகிச்சை விரைந்து வழங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Tuesday, March 24, 2020

ஹன்டா வைரஸ் ஒரு தெளிவான விளக்கம்

ஹண்டா வைரஸ் ஒரு தெளிவு.

கையில் போனும் பேஸ்புக்கும் இருப்பதற்காக உண்மைத்தன்மையை ஆராயாமல் எதனையும் சமூகத்திற்கு மத்தியில் கொண்டு சென்று பீதியைக் கிளப்பாதீர்கள்.

சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு ஹண்டா வைரஸினால் ஒருவர் இறந்துள்ளார். யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர் இறந்துள்ளார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

ஹண்டா வைரஸானது எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா உள்ளிட்ட மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் தரும் செய்தி.

இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இந்த வைரஸ்கள் இன்னும் பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹண்டா வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும். தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் பாதிப்பு என தொற்றுக்களை ஏற்படுத்தும். இது உயிரிழப்பு வரை செல்லக்கூடும்.

எனவே கொரோனாவின் அளவுக்கு இதனை பயங்கரப்படுத்தி மக்களைக் குழப்பி விளையாடாதீர்கள். எல்லோரும் மனதைரியமும் திடாகத்திரமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களல்லர். எனினும் மிக அவதானமாக இருப்பது எமக்கும் எமது சமூகத்திற்கும் இந்த உலகுக்கும் நல்லது.


ஹன்டா வைரஸ்

கடந்த ஆண்டு, சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எலியின் மூலம் பரவும் புதிய ஹண்டா வை ரஸின் தா க்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த வை ரஸ் தாக்குதலில் சிலியில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வை ரஸ் தா க்கம், மற்ற வை ரஸ் தொ டர்பான நோ ய்களை பின்னுக்கு தள்ளியது.இந்த நிலையில், த ற்போது சீனாவில், ஹ ண்டா வை ரஸ் தா க்குதல் பரவி வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே பீ தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வை ரஸ் குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், எலியில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஹண்டா வைரஸ் தா க்குதல் உடலில் ஏற்பட்டால், பா திக்கப்பட்ட நபர்களுக்கு. கா ய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோ ளாறு இரத்தப் போக்கு ஏறபட்டும், இதையடுத்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செ யலி ழந்து ம ரணம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Sunday, March 22, 2020

Curfew

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் சில பகுதிகளில் நாளை தளர்த்தப்படவிருக்கின்ற காலப் பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

01) எம்மைச் சூழ்ந்திருக்கும் கொரோனா ஆபத்து நீங்கியதனால் தான் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது என்று பிழையாக நினைத்துவிடக் கூடாது.
02) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுவிட்டது என்ற காரணத்தினால், எல்லோரும் வெளியேறி வழமை போல நடமாடலாம் என்று நினைத்துவிடக் கூடாது.
03) முக்கியமாக வயதானவர்கள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நோயுடையவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களை வெளியே நடமாட அனுமதிக்கக் கூடாது.
04) அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியிருப்பின், ஒருவர் அதுவும் குறைந்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டும்.
05) அதிகளவில் சனநடமாட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
06) செல்லும் இடங்களில் இயன்றவரை அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
07) தடிமன் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இயன்றவரை வெளியே செல்லாதிருக்க வேண்டும். உதவிகள் இல்லாத பட்சத்தில் வெளியே செல்ல வேண்டியேற்பட்டால், கட்டாயமாக முகக் கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
08) பல சரக்குக் கடைகளைத் திறந்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் அதிகமானவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.
09) வர்த்தக நிறுவனங்களின் முன்னால் கை கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டிராத வர்த்தக நிறுவனங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். பொது சுகாதார பரிசோதகர்கள் அவ்வாறான வர்த்தக நிறுவனங்களைத் திறபப்தற்கு அனுமதிக்கக் கூடாது.
10) இயன்றவரை பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும்.
11) வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் குளிரூட்டிகள் பாவிப்பதனைத் தவிர்க்க வேண்டும்.
12) மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நேரத்துக்கு முன்னர் தமது வீடுகளை சென்றடைந்துவிட வேண்டும்.
13) #மிகவும்_முக்கியமாக, வெளிநாட்டிலிருந்து வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளைச் சேர்ந்த எவரும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது என்று வெளியே வரவே கூடாது. இதனை அவர்களின் அயலவர்களும், கிராம சேவை அலுவலரும், சமூக பாதுகாப்புக் குழுவினரும் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதனை கிராம சேவை அலுவலர் உறுதிப்படுத்தி தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
14) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதன் நோக்கத்தை அடைந்தகொள்ள சகலரும் பொலிசாருக்கும், முப்படையினருக்கும் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
15) இவை யாவும் எம்மைப் பாதுகாப்பதற்காகவே என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.

Mr.MW

அல்லாஹ் மனிதர்களிடம் கேட்கும் கேள்விகள்

நெருப்பு, இப்றாஹீம் (அலை) அவர்களை எரிக்கவில்லை.

கத்தி, இஸ்மாஈல் (அலை) அவர்களை அறுக்கவில்லை.

மீன், யூனுஸ் (அலை) அவர்களை உண்ணவில்லை.

கடல், மூஸா (அலை) அவர்களை மூழ்கடிக்கவில்லை.

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا  هُوَ مَوْلٰٮنَا

"(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள்."

அல்குர்ஆன் 9 : 51