தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் சில பகுதிகளில் நாளை தளர்த்தப்படவிருக்கின்ற காலப் பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
01) எம்மைச் சூழ்ந்திருக்கும் கொரோனா ஆபத்து நீங்கியதனால் தான் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது என்று பிழையாக நினைத்துவிடக் கூடாது.
02) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுவிட்டது என்ற காரணத்தினால், எல்லோரும் வெளியேறி வழமை போல நடமாடலாம் என்று நினைத்துவிடக் கூடாது.
03) முக்கியமாக வயதானவர்கள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நோயுடையவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களை வெளியே நடமாட அனுமதிக்கக் கூடாது.
04) அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியிருப்பின், ஒருவர் அதுவும் குறைந்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டும்.
05) அதிகளவில் சனநடமாட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
06) செல்லும் இடங்களில் இயன்றவரை அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
07) தடிமன் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இயன்றவரை வெளியே செல்லாதிருக்க வேண்டும். உதவிகள் இல்லாத பட்சத்தில் வெளியே செல்ல வேண்டியேற்பட்டால், கட்டாயமாக முகக் கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
08) பல சரக்குக் கடைகளைத் திறந்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் அதிகமானவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.
09) வர்த்தக நிறுவனங்களின் முன்னால் கை கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டிராத வர்த்தக நிறுவனங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். பொது சுகாதார பரிசோதகர்கள் அவ்வாறான வர்த்தக நிறுவனங்களைத் திறபப்தற்கு அனுமதிக்கக் கூடாது.
10) இயன்றவரை பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும்.
11) வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் குளிரூட்டிகள் பாவிப்பதனைத் தவிர்க்க வேண்டும்.
12) மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நேரத்துக்கு முன்னர் தமது வீடுகளை சென்றடைந்துவிட வேண்டும்.
13) #மிகவும்_முக்கியமாக, வெளிநாட்டிலிருந்து வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளைச் சேர்ந்த எவரும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது என்று வெளியே வரவே கூடாது. இதனை அவர்களின் அயலவர்களும், கிராம சேவை அலுவலரும், சமூக பாதுகாப்புக் குழுவினரும் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதனை கிராம சேவை அலுவலர் உறுதிப்படுத்தி தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
14) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதன் நோக்கத்தை அடைந்தகொள்ள சகலரும் பொலிசாருக்கும், முப்படையினருக்கும் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
15) இவை யாவும் எம்மைப் பாதுகாப்பதற்காகவே என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
Mr.MW
No comments:
Post a Comment